சென்னை,ஜுலை. 29-
மதுரவாயல் நெற்குன்றம் சாலை மேட்டுக்குப்பத்தில் பழைய இரும்புகளை வாங்கி விற்பனை செய்பவர் செம்புலிங்கம். இவரது கடை அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் காளிமுத்து.
இரண்டு கடைக்காரர் களுக்கும் இடையே வியாபார போட்டி இருந்து வந்தது. நேற்று இரவு செம்புலிங்கத்தின் வியா பாரத்துக்கு உதவியாக இருந்த அவரது மகன்கள் கிருஷ்ணன் (21), ராமேஸ் வரன் (15) ஆகியோர் சினிமா பார்க்க சென்றனர்.
சினிமா முடிந்து அண் ணன்-தம்பி இருவரும் வீடு திரும்பினார்கள். கோயம் பேடு சின்யா நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே இரவு 11 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த காளி முத்து மற்றும் அவரது உறவினர்கள் உருட்டு கட்டைகளுடன் வந்து சிறுவன் ராமேஸ்வரனை கடத்திச் சென்றனர்.
சிறுவன் அலறி துடித் தான். சிறிது நேரத்துக்குப் பிறகு ராமேஸ்வரனின் அண் ணன் கிருஷ்ணனுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் ரூ. 15 லட்சம் கொடுத்தால் உன் தம்பியை ஒப்படைப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்.
இதுகுறித்து கிருஷ்ணன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரி வித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சேகர், இணை கமிஷனர் பால சுப்பிரமணியம், அண்ணா நகர் துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் உத்தரவுப்படி தனி போலீஸ் படை கடத்தல்காரர்களை பிடிக்க தயார் ஆனது.
கிருஷ்ணனிடம் மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பலிடம் "லட்சக்கணக்கில் பணம் இல்லை. 6 ஆயிரம் ரூபாய்தான் இருக்கிறது'' என்றார். `சரி இருப்பதை கொண்டு வா' என்று எதிர் முனையில் பேசியவர் கூறினார். இதையடுத்து கடத்தல்காரர்கள் கூறியபடி ஜெய்நகர் 1-வது மெயின் ரோட்டுக்கு கிருஷ்ணன் பணத்துடன் ஆட்டோவில் சென்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீ சார் மோட்டார்சைக்கிள் களில் தனத்தனியான மாறு வேடத்தில் சென்றனர். கிருஷ்ணன் ஆட்டோவில் இருந்து இறங்கி கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்ததும், போலீசார் சுற்றி வளைத்தனர்.
சிறுவன் ராமேஸ்வரன் மீட்கப்பட்டான். பணத்துக் காக சிறுவனை கடத்திய காளிமுத்து (47), அவரது உறவினர்கள் அரிராமன் (27), தங்கராஜ் (25), முனி யாண்டி (23), ஜெயபால் (24), வடிவேல் (24) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த உருட்டுகட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவன் கடத்தப்பட்ட 1 மணி நேரத்தில் அவனை மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட் டினார்கள்.
கைதான காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் மல்லி புதுக்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. வேறு கடத்தலில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.